×

அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும்  இந்த தண்டு 

 

பொதுவாக வாழைமரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பொருளுமே  நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்குகிறது .அந்த வகையில் வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழை தண்டு மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம் 

1. அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் கஷ்டப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள அமில தன்மையை சமன் செய்து விரைவாக நெஞ்செரிச்சலை குணமாக்குகிறது.
2. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை வாழைத்தண்டு கட்டுப்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோய்களோ வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
3. வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து உடலின் செல்களில் இருக்கிற கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

4.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுபடுத்த வாழை தண்டு உதவுகிறது.
5.மேலும் இந்த வாழைத்தண்டானது வயிற்றில் உள்ள புண்களை குணமாக்க உதவுகின்றது.

6.வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். 
7.சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8.வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. 
9.வாழை தண்டு ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
10.மேலும் வாழை தண்டு மூலம் பெண்களின் உடல் பலம் பெருகும்.