×

இதை  சாப்பிடுவதால் வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு நல்லது 

 

சோயா பீன்ஸ் நம் உடலுக்கு பல வைட்டமின்களை அள்ளி கொடுக்கும் ஒரு ஊட்டச்சத்துள்ள உணவாகும் .இந்த சோயாவில் சோயா மாவு, சோயா புரதம், டோஃபு, சோயா பால், சோயா சாஸ் மற்றும் சோயாபீன் எண்ணெய் போன்ற உணவுகளை தயாரித்து உண்டு வருகிறோம் .இந்த சோயா மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 

1.பொதுவாக சோயா நம் உடலில்  கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.
2.இந்த சோயா அதிகம் உண்ணும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; 
3.இந்த சோயா அதிகம் உண்ணும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; 4.இந்த சோயாவில் , புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. 
5.மேலும் சோயாவில் மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய சத்துக்களும்   இருக்கின்றன. 
6.மேலும் சிலருக்கு பால் அலர்ஜியாகும் .இப்படி பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். 
7.சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. 8.அதிகம் சோயா சாப்பிடுவதால் வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. 
9.எப்படியிருந்தாலும் நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சோயா சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்