ஒரு நாளைக்கு எவ்ளோ பாதாமை சாப்பிடலாம் தெரியுமா ?
பொதுவாக பாதாம் நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது ஆனால் அதையும் அளவோடு சாப்பிட்டால் பல ஆரோக்கியம் கொடுக்கும் .இந்த பாதாமை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் வரும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.நம் உடல் ஆரோக்கியத்திற்காக பெரும்பாலானோர் தினமும் பாதாம் சாப்பிட்டு வருகின்றனர். பாதாம் உடல் எடையை குறைப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி என நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.
2.இருப்பினும் பாதாமை அதிகம் நாம் சாப்பிடும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அப்படி நாம் என்னவெல்லாம் சந்திக்கக் கூடும் என பார்க்கலாம்.
3.தினமும் பாதாமை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும்.
4.ஒரு நாளுக்கு ஐந்து முதல் ஆறு பாதாம் சாப்பிடுவது சிறந்தது.
5.இதனைத் தொடர்ந்து பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும். 6.இதனால் வயிற்றுப்போக்கு வயிற்று உப்பசம், பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
7.பாதாமில் அதிகப்படியான ஆக்சலேட் உள்ளதால் சிறுநீரகக் கற்கள் வர வாய்ப்பு உள்ளது.
8.மேலும் பாதாமை அதிகம் சாப்பிடுவதால் ஒவ்வாமை பிரச்சனையும் வர வாய்ப்புள்ளது.
9.எனவே நம் உடலுக்கு நல்லது என்று அளவுக்கு அதிகமாக உண்ணும் பொது அதுவே நம் உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இதனால் அளவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.