இந்த மீனில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் உள்ளது
பொதுவாக மீன் வகைகளில் நம் உடல் ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் மூலக்கூறுகள் உள்ளது ,மத்தி மீனில் நல்ல ஆரோக்க்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அதே போல் நெத்திலி மீனிலும் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் உள்ளது ,அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக நெத்திலி மீனில் இதயம், தைராய்டு சுரப்பி, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் . ஏனெனில் செலினியம் இதில் அதிகம் காணப்படுகிறது.
2.ஆரோக்கியம் மிகுந்த நெத்திலியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளது.
3.பொதுவாக நம்முடைய நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை கொண்டு செல்ல இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இது நெத்திலியில் காணப்படுகிறது
4.வலுவான எலும்புகளுக்கு கால்சியம் சத்து முக்கியமானது. இது நெத்திலியில் காணப்படுகிறது
5.நெத்திலி மீனின் காணப்படக்கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் செலினியம் இதய நோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க உதவும்.
6.நெத்திலியில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளை மேம்படுத்த உதவும் ,
7.நெத்திலியில் காணப்படும் ஒமேகா 3மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும்
8.நெத்திலியில் காணப்படும் ஒமேகா 3 இரத்த நாளங்களின் செயல்பாடு மற்றும் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
9.நெத்திலி மீன்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் ஒரு சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது.
10.மிக முக்கியமாக இதில் சோடியம் அதிக அளவில் காணப்படும். இது உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்