×

அடிக்கடி புதினாக்கீரையைச்  பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக நம் வீட்டு தோட்டத்திலேயும் ,சாலையோரமாகவும் ஏராளமான  இயற்கை மூலிகைகள் விளைந்து காணப்படுகின்றன .அந்த வகையில் நம் தோட்டத்திலேயே நாம் வளர்க்க கூடிய புதினா கீரையின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.அடிக்கடி புதினாக்கீரையைச் சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாவதோடு ,உடலில்  புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
2.சிலருக்கு எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு உண்டாகும் ,,இப்படி ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும்.
3.புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து கொள்ளவும் .அதை , ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அந்த புதினா நீரை தெளிய வைத்து குடித்து வரவும்.
4. இந்த புதினா குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் நம் உடலை விட்டு ஓடி விடும் 
5.புதினாக்கீரையைத் துவையலாக சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள்குணமாகும் . 
6.சிலருக்கு ஹார்ட் கோளாறு இருக்கும் அவர்கள் புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்தி வர இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். 
7.தொண்டைப்புண் கோளாறுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.
8.புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். 
9.இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் நம் உடலை விட்டே ஓடிவிடும் 
10.மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து  பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.