இரத்த அழுத்தம் வராமலிருக்க இந்த இலையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது
பொதுவாக இரத்த அழுத்தம் என்பது இன்று சர்க்கரை நோய்க்கு அடுத்த படியாக எங்கும் பரவியுள்ளது .இந்த நோய் வர முக்கிய காரணம் ஸ்ட்ரெஸ் .இந்த ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க இன்று பல யோகா நிலையங்கள் செயல் படுகின்றன .இரத்த அழுத்தம் வராமலிருக்க இயற்கை முறையில் சில வழிகளை கூறுகிறோம்
1.இரத்த அழுத்தம் வராமலிருக்கவும் ,இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள டாக்டர்கள் கூறுகின்றனர் .
2.இரத்த அழுத்தம் வராமலிருக்க குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும்.
3.இரத்த அழுத்தம் வராமலிருக்க கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
4.இரத்த அழுத்தம் வராமலிருக்க காலை உணவை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.
5.இரத்த அழுத்தம் வராமலிருக்க உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
6.இரத்த அழுத்தம் வராமலிருக்க உணவு அருந்திய உடன் தூங்கச் செல்லக்கூடாது.
7.இரத்த அழுத்தம் வராமலிருக்க இரவில் அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு.
8.இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை.
9.உடலும் மனதும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ,இரத்த அழுத்தம் நோய் வராமல் ஏற்படாமல் தடுக்கலாம்.