×

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால்,என்ன நன்மை தெரியுமா ?

 

தேன் ஒரு மிக சிறந்த ஒரு மூலிகை பொருளாகும் .இதன் மகிமை பற்றி பல சித்தர்கள் தங்கள் நூல்களில் எழுதியுள்ளார்கள் .மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் தேனில் 70க்கும் மேற்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.தேன் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்  

1.ஆரோக்கியம் தரும் தேன் நமக்கு விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்கும் ஆற்றல் கொண்டது 
2.பலவீனமான குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.
3.மேலும் சிலருக்கு கண் நோய் இருக்கும் ., அவர்களும் தோல் நோய் உள்ளவர்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். மேலும் வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.
4.சிலருக்கு வாந்தி, குமட்டல், இருக்கும் .அவர்கள் இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
5.தேன் அதன் சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக கலோரிகளின் மூலமாகும். 
6. தேனுடன்  முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் இருக்கலாம் 
7.நம் மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். மூட்டு வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.
8.1 தேக்கரண்டி தேனில் 60 கலோரிகள் உள்ளன. 
9.மேலும் தேனில் ஊட்டச்சத்துக்கள் பிற நன்மை பயக்கும் இரசாயனங்கள் உள்ளன. 
10..மேலும் தேனில்  வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன