×

இந்த கடலை  சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது

 

பொதுவாக கடலை உணவுகளில் நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள் அதிகம் உள்ளது .பொட்டு கடலை முதல் வேர்க்கடலை வரை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் .அந்தவகையில் வேர்க்கடலை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.வேர்க்கடலை  சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. 
2.வேர்க்கடலையில்  நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.
3.வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும்.
4.தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். 
5.வேர்க்கடலையை எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.
6..உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக்குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒருகைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும்.
7.அந்த வேர்கடலையுடன்  சீனி சோக்காத காபி அல்லதுடீ அருந்தவும். 
8.பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. 
9.இதனால் உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்