சுறுசுறுப்பான உணர்வு கிடைத்து ,மூளை நன்றாக இயங்க உதவும் டீ
பொதுவாக தேனீர் குடிக்கும் பழக்கம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்த பிறகுதான் நமக்கும் அந்த பழக்கம் தொற்றி கொண்டது .அதுவரையில் காலையில் நீராகாரம் என்ற பழைய சோறு நீரைத்தான் குடித்து ஆரோக்கியமாய் வாழ்ந்தோம் .ஆனால் அவர்கள் வந்த பின்னர் தேநீருக்கு அடிமையாகி விட்டோம் இந்த தேநீர் வகையில் க்ரீன் டீ என்று ஒரு வகையுள்ளது .இதன் மூலம் நாம் அடையும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.கிரீன் டீ சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்படுகிறது .மேலும் இந்த டீ , உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன.
2.சிலருக்கு இளமையிலேயே வயதான தோற்றம் வரும் .இப்படி வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.
3.கிரீன் டீ மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.
4.சிலர் மந்தமாக இருப்பர் .அவர்கள் க்ரீன் டி குடிக்க சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.
5.கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர் ஏற்படாமல் காக்கலாம்
6.. கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.
7.கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. 8.மேலும் 8.மேலும் பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.
9.கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது.
10. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.
11. வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம்.
12.க்ரீன் டீ கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்.