வாரத்தில் மூன்று நாட்கள் இந்த முட்டைக்கோஸ் ஜூஸ் குடிக்க என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக பழஜூஸ் போல காய்கறிகளை கொண்டும் ஆரோக்கியமான ஜூஸ் செய்யலாம் .இந்த பதிவில் முட்டை கோஸ் கொண்டு ஆரோக்கிய ஜூஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்
1.ஆரோக்கியமான ஜூஸ் செய்ய முதலில் முட்டைக்கோஸ் – 50 கிராம் மற்றும் மிளகு எடுத்து கொள்ளுங்கள்
2.இதனுடன் தண்ணீர் – 1 கப் மற்றும் உப்பு எடுத்து கொள்வோம்
3.இதனுடன் இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் எடுத்து கொள்வோம்
4.ஜூஸ் செய்ய முதலில் முட்டைக்கோஸை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
5.மிக்சியில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு அதனுடன் இஞ்சி, மிளகு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
6.நன்றாக அரைந்ததும் இந்த ஜூஸை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி சாரை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
7.ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன், இந்த முட்டைகோஸ் சாறை சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு, குடித்துவிட வேண்டும்.
8.சூப்பரான சத்தான முட்டைக்கோஸ் ஜூஸ் தயார். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்