×

தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டா உடலில் இவ்ளோ அதிசயம் நடக்குமா ?

 

அத்தி Moraceae தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். இது களிமண் நிலம் மற்றும் ஆற்றோரப் பகுதிகளிலும் நன்கு வளரும்.அத்தி மரத்தில் வினோதமான முறையில் பூவும் விதைகளும் சேர்ந்து பழம் போன்றதொரு தோற்றத்தைத் தருவதாக அறியப்படுகிறது.

தலை முதல் பாதம் வரையிலான உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும்.இதில் விட்டமின், கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்திப்பழத்தில் புழுக்கள் அதிகமாக இருக்கும் என்பதால் நன்கு சுத்தப்படுத்திய பிறகே உண்ண வேண்டும். வழக்கமான உணவுக்கு 2 மணி நேரம் முன்னர் அல்லது 2 மணி நேரத்துக்குப் பின்னர் உண்ண வேண்டும்.
அத்திப் பழங்கள் 6&8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம். உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது

 தினமும் உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும்.