×

அதிமதுரம் டீ  அதிகமா சாப்பிட்டதும் என்னோட உடம்புல என்னென்னெ அதிசயம் நடந்துச்சு தெரியுமா

 

தற்காலங்களில் உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வரும் போது, நமது மக்கள் ரசாயனங்கள் மிகுந்த ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”. அதிரமதுரத்தின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்

அதிமதுரம் ஆயுர்வேதம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த மூலிகை செடியாகும்.

இதில் டீ போட்டு குடிப்பது நன்மையை தரும். தற்போது இந்த டீயை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 1 டம்ளர்

நாட்டு சர்க்கரை - தேவைக்கு

செய்முறை

அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.

அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும்.

அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம். இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.