×

அலர்ஜியை  உண்டாக்கும் உணவு வகைகள் என்னென்ன தெரியுமா ?

 

பொதுவாக நமக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட்டவுடன் உடலில் நமக்கு சில அறிகுறிகள் தோன்றுகின்றன.
இந்த ஒவ்வாமை காரணமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உடலில் அலர்ஜி உண்டாகும் .இந்த அலர்ஜியை உண்டாக்கும் உணவு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.சிலருக்கு ஒவ்வாமை காரணமாக குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற தொல்லைகள் உருவாகின்றன. 
2.சிலருக்கு ஒவ்வாமை காரணமாக சிலருக்கு தோலில் அரிப்பு, தடிப்புகள் வெளிப்படுகின்றன.
3.இந்த  ஒவ்வாமை காரணமாக உதடு வீங்குதல், கன்னம் சிவத்தல், கண்கள் சிவத்தல் தோன்றுகின்றன , 
4.இந்த  ஒவ்வாமை காரணமாக இமைகள், காது, தொண்டை போன்ற இடங்களில் வீக்கம் உண்டாகும் , 
5.இந்த  ஒவ்வாமை காரணமாக சுவாசிக்க சிரமம் என அறிகுறிகள் தோன்றலாம். 
6.சிலருக்கு ஆஸ்துமா, தாங்க முடியாத தலைவலியும் இந்த  ஒவ்வாமை காரணமாக உண்டாகும் 
7.பொதுவாக ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகளாக முட்டை, பசுப்பால், கெட்டி தயிர், கடல் மீன்கள்,உள்ளன 
 8.மேலும் கருவாடு, கோதுமை, மக்காச்சோளம், முந்திரி, போன்ற பொருட்களும் ஒவ்வாமையை உண்டாக்கும் 
9.மேலும் ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தம்பழம், வாழைப்பழம்,கூட ஒவ்வாமையை உண்டாக்கும்  
10.பட்டாணி, பாதாம், சோயா பீன்ஸ், சாக்லேட்டில் உள்ள கொக்கோ, சோடா போன்றவைகள் அதிகம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
11.மேலும் மீன்களில் குளத்து மீன்களை விட கடல் மீன்கள் தான் ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்துகின்றன.