அகத்தி கீரையுடன் , மருதாணி இலையை சேர்த்து கட்டினா எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?
.அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவ குணமுள்ளது . இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப் போட்டால் வெடிப்புகள் மறைந்து கால் பாதம் பளபளப்பாக ஷைனிங்காக இருக்கும்
மேலும் இந்த கீரையை தொடந்து சாப்பிடுவதால் குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் , ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.
அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, சளி ஜலதோஷம் ,அம்மைக் காய்ச்சல் முதல் சாதாரண காய்ச்சல் வரை குணமாகும்.காய்ச்சலுக்கு இந்த கீரையின் சாறை மூக்கில் பிழிந்து விடணும்
அகத்தி கீரையை வேக வைத்து கட்டினால் காயம் குணமாகும் ,இது வயிற்று புண் மற்றும் கண் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உடையது .இதை அரைத்துக் காயங்களுக்கு கட்ட காயம் விரைவில் ஆறும்.