×

 தண்ணீரை அளவுக்கதிகமாக குடிப்பதால் நேரும் தீமைகள்

 

பொதுவாக தண்ணீர் நம் உடலுக்கு அவசியமான ஒன்று .சிலர் தாகமெடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பதுண்டு ,இன்னும் சிலர் தாகமெடுக்காமலேயே தண்ணீர் குடிப்பதுண்டு .இந்த தண்ணீரை அளவுக்கதிகமாக குடிப்பதால் நேரும் தீமைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் 

1.வெப்பமான காலக்கட்டத்தில் உடலில் நீர்ச்சத்து குறைந்து இயல்பாகவே தாகம் அதிகமாக எடுக்கும். 
2.இப்படி உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க  தண்ணீரை அதிகமாக குடிக்க தூண்டும்.
3.பொதுவாக தண்ணீரை அதிகளவு குடிப்பதால் சில தீமைகளும் ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகிறது  
4. நம் ஒவ்வொருவரது உடல் எடையில் தண்ணீர் என்பது 50% முதல் 70% வரை உள்ளது.
5.ஆனால், அதிகமாக உழைக்கும் நபர்கள், விளையாட்டு வீரர்கள் சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீரை அதிகம் குடிப்பது உண்டு . 
6.இப்படி, திடீரென்று அதிகளவு தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகத்தால் அதிகளவு தண்ணீரை வெளியேற்ற முடியாது.
7.இதனால்  உடல் ரீதியாக பல தீமைகள் ஏற்படும்.சில நேரத்தில் கிட்னி பாதிப்பு ஏற்படும் .சிலருக்கு உயிரிழப்பு கூட இப்படி திடீரென்று தண்ணீர் குடிப்பதில் நேரிடுகிறது