×

கொரோனா காலத்தில் மனதை பாசிட்டிவாக வைத்திருக்க 6 டிப்ஸ் இதோ!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை பரவல் அதிதீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நெருக்கடியான மருத்துவப் பேரிடர் காலத்தில் தனித்திருப்பது தான் ஒரே வழி என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் தனிமையில் இருப்பது மனநலத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடன் பழகாமல் வீட்டின் உள்ளே முடங்கியிருப்பது ஒருவிதமான மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. மனநலப் பிரச்சினைகளை உருவாக்கும் கொரோனா காலம்! மனக்கவலை (anxiety), மனச்சோர்வு (depression), மன
 

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை பரவல் அதிதீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நெருக்கடியான மருத்துவப் பேரிடர் காலத்தில் தனித்திருப்பது தான் ஒரே வழி என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் தனிமையில் இருப்பது மனநலத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடன் பழகாமல் வீட்டின் உள்ளே முடங்கியிருப்பது ஒருவிதமான மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

மனநலப் பிரச்சினைகளை உருவாக்கும் கொரோனா காலம்!

மனக்கவலை (anxiety), மனச்சோர்வு (depression), மன அழுத்தத்தால் உருவாகும் கோளாறுகள் (post-traumatic stress disorders) ஆகிய மூன்றும் பொதுவான மனநலப் பிரச்சினையாக இந்தக் கொரோனா காலத்தில் உருவெடுத்திருக்கின்றன. மக்களிடையே ஏற்கெனவே இருந்த மனநலப் பிரச்சினையை கொரோனா மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

தனியாக இருப்பதால் நம்முடைய உணர்வுகளைச் சக மனிதர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே போட்டு புழுங்கி கொண்டு எதிர்காலத்தை நினைத்து அதிகமாக யோசித்து கவலையை வளர்த்துக்கொள்கிறோம். இந்தப் பிரச்சினைகளை கையாள ஆறு வழிமுறைகளை மனநல மருத்துவர் பாவனா பர்மி கூறுகிறார். அவை பின்வருமாறு:

நண்பர்களுடன் தொடர்பில் இருத்தல்:

தனியாக இருப்பதும் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதும் மனக்கவலையை அதிகரிக்கும். இதைப் போக்குவதற்கு உங்களுடையை நண்பர்களுடன் வீடியோ காலில் முகம் பார்த்துப் பேசுங்கள். அப்படிப் பேசும்போது கொஞ்சமேனும் நேரடியாகப் பேசுவது போன்ற ஒரு உணர்வு கிடைக்கும். அவர்களிடம் உங்களது மனக்கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருவேளை சொல்லிக்கொள்ளும்படி உங்களுக்கு நண்பர்கள் இல்லையென்றால், உடனே புதிய நண்பர்களைத் தேடுங்கள். அவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனதை இலகுவாக்கும் பயிற்சி:

ஆழ்ந்த தியானம் செய்தல், ஆழ்ந்த சுவாசப் பயிற்சி மேற்கொள்ளுதல், தசைகளை இலகுவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்யும்போது உங்களின் மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல்:

உடற்பயிற்சி செய்வது இயல்பாகவே மன அழுத்தத்தைக் குறைக்கவல்லது. மனக்கவலைகளையும் போக்க இயற்கை நமக்கு அளித்த கொடை. என்னவொன்று நாம் மனது வைக்க வேண்டும் அவ்வளவே. அதிகபட்ட நன்மை கொண்ட உடற்பயிற்சி வகைகளைக் குறைந்தது 30 நிமிடம் மேற்கொண்டாலே போதுமானது. கடினமாக இல்லாமல் நடப்பது, ஓடுவது, நடனம் ஆடுவது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டாலே மன அழுத்தத்தம் வெகுவாகக் குறையும்.

நாள்பட்ட கவலையை நிறுத்துதல்:

கவலைப்படுவது மனிதர்களுக்கே இருக்கும் மிக முக்கியப் பழக்கம். ஆனால் அந்தப் பழக்கத்தை உடைக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நாம் reality என்பதை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். இது இப்படித் தான் என்ற முடிவுக்கு வர வேண்டும். கவலைகளை ஏற்படுத்தும் சிந்தனைகளைச் சவாலுடன் எதிர்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது நிச்சயமாக நாள்பட்ட கவலைகள் குறைந்து மனம் அமைதி கொள்ளும்.

துணிச்சல் மனதைப் பக்குப்படுத்துதல்:

உங்களுக்கு இருக்கும் கவலைகள் எதோ ஒரு கவனச்சிதறலில் தற்காலிகமாக சில நாட்கள் இல்லாமல் போகலாம். ஆனால் பின்னால் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம். நீங்கள் அதைக் கண்டு பயப்படாமல் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைப் பக்குவப்படுத்த பழகுகையில் கவலைகள் பெரிய விஷயமாக நமக்குத் தெரியாது.

நமக்கு நாமே சவால் விடுதல்:

மனக்கவலைகளை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொண்டால் உங்களின் துணிச்சலை அது மட்டுப்படுத்தும். உங்களுக்கு நேரும் ஆபத்தை மிகைப்படுத்திக் காட்டும். கவலையை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள், அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்யுங்கள். மேலும் கவலைகளை எப்படி தீர்ப்பது என்பது பற்றி பல கோணங்களில் சிந்திக்க முற்படுங்கள். இது மிக மோசமான சூழலுக்கு உங்களை நகர்த்திச் செல்வதைத் தடுக்கும். உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள். எளிதில் மனநலப் பிரச்சினைகள் இருந்து வெளிவர உதவும்.