×

வீடு, குடும்பம் எல்லாமே சிவப்பு வெள்ளை.. இப்படியும் பிரபலம் ஆகலாம்!

எதை செய்தாவது பிரபலம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படியும் பிரபலம் ஆகலாமா என்று நினைக்க வைத்திருக்கிறார் செவன்ராஜ். 58 வயதாகும் செவன்ராஜ் பெங்களூருவை சேர்ந்தவர். குடும்பத்தில் 7வது பிள்ளையாக பிறந்ததாள், பெற்றோர் இவருக்கு செவன்ராஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதனால் 7 என்ற எண் வரும்படியே எல்லாவற்றையும் வாங்கி குவித்திருக்கிறார் செவன்ராஜ். அதில் அவர் திருப்திப்படவில்லை. எதைச்செய்து பிரபலம் ஆகலாம். என்று யோசித்தவருக்கு 18 வயதில் ஒரு எண்ணம் வந்திருக்கிறது. தனக்கு பிடித்த காந்தியடிகள் ஆடையினால்தான்
 

எதை செய்தாவது பிரபலம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படியும் பிரபலம் ஆகலாமா என்று நினைக்க வைத்திருக்கிறார் செவன்ராஜ்.

58 வயதாகும் செவன்ராஜ் பெங்களூருவை சேர்ந்தவர். குடும்பத்தில் 7வது பிள்ளையாக பிறந்ததாள், பெற்றோர் இவருக்கு செவன்ராஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதனால் 7 என்ற எண் வரும்படியே எல்லாவற்றையும் வாங்கி குவித்திருக்கிறார் செவன்ராஜ். அதில் அவர் திருப்திப்படவில்லை.

எதைச்செய்து பிரபலம் ஆகலாம். என்று யோசித்தவருக்கு 18 வயதில் ஒரு எண்ணம் வந்திருக்கிறது. தனக்கு பிடித்த காந்தியடிகள் ஆடையினால்தான் மக்களை கவர்ந்திருக்கிறார் என்பதை உணர்ந்த செவன்ராஜ், தானும் ஆடையில் பிரபலம ஆக வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி, வெள்ளைமற்றும் சிவப்பு ஆடைகளை அணிய ஆரம்பித்தார். அப்புறம் கார் நிறமும் சிகப்பு வெள்ளையில் இருக்கும்படி செய்தார். ஷும், செப்பல், வாட்ச், கண் கண்ணாடி, பேனா என்று எல்லாமே சிவப்பு வெள்ளையில் வாங்கியவர் வீட்டையும் சிகப்பு வெள்ளையாக மாற்றிவிட்டார்.

வீட்டின் கதவு முதல் கழிவறை வரைக்கும் சிவப்பு வெள்ளைதான்.

இவர்தான் இப்படி என்றால் இவருக்கு வந்த மனைவியும் இவருடன் ஒத்துப்போய்விட்டார். அவரும் எல்லாமே சிவப்பு -வெள்ளைதான். செவன்ராஜின் மகளும், மகனுடம் கூட சிவப்பு வெள்ளைதான்.

இதனால், தனித்துவமான வாழ்க்கை என்ற பகுதியில், வேல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது செவன்ராஜ் குடும்பம்.