×

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் என்ன?

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் என்ன என்பதை இன்று பிற்பகலில் அறிவிக்கிறது நேபாளம் மற்றும் சீனா. உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்றும், அதன் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டர் என்றும் இதுவரை அறியப்பட்டிருக்கிறது. ஆனால், நேபாளத்தையே உலுக்கி எடுத்த அந்த 2015 பூகம்பத்திற்கு பிறகும் இதே அளவுதான் இருக்குமா சந்தேகம் நேபாளத்திற்கு வந்தது. சீனாவும் இதே சந்தேகத்தை எழுப்பியது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தினை மீண்டும் அளவிட வேண்டுமென்று சீனாவும், நேபாளமும் முடிவெடுத்தது. கடந்த
 

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் என்ன என்பதை இன்று பிற்பகலில் அறிவிக்கிறது நேபாளம் மற்றும் சீனா.

உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்றும், அதன் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டர் என்றும் இதுவரை அறியப்பட்டிருக்கிறது. ஆனால், நேபாளத்தையே உலுக்கி எடுத்த அந்த 2015 பூகம்பத்திற்கு பிறகும் இதே அளவுதான் இருக்குமா சந்தேகம் நேபாளத்திற்கு வந்தது. சீனாவும் இதே சந்தேகத்தை எழுப்பியது.

இதனால் எவரெஸ்ட் சிகரத்தினை மீண்டும் அளவிட வேண்டுமென்று சீனாவும், நேபாளமும் முடிவெடுத்தது. கடந்த 2019ம் ஆண்டில் சீன அதிபர் ஜிஜின்பிங்கின் நேபாள பயணத்தில் இரண்டு நாடுகளும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

நேபாள அதிகாரிகளும் நிபுணர்களும் எவரெஸ்ட்டின் ஒரு புறம் அளவிட்டு வந்த நிலையில், திபெத்திய பக்கத்தில் இருந்து சீனாவும் எவரெஸ்ட் உயரத்தை அளவிட்டு வந்தது.

நேபாளமும். சீனாவும் எடுத்த அளவுகளை கொண்டு இன்று இரு நாடுகளும் இணைந்து எவரெஸ்ட்டின் உண்மையான உயரத்தை அறிவிக்கிறது. இதற்காக அறிவிப்பை இமயமலை ஆய்வுத்துறையின் துணை இயக்குநர் ஜெனரல் சுஷில் நர்சிங் ராஜ்பந்தாரி வெளியிட்டுள்ளார்.

எவரெஸ்டின் உயரம் 8 ஆயிரத்து 848 கிலோ மீட்டர் என்று 1954ம் ஆண்டில் சர்வே ஆப் இந்தியா அறிவித்த நிலையில், தற்போது 2020ம் ஆண்டில் சீனாவும், நேபாளமும் இணைந்து எவரெஸ்டின் புதிய உயரத்தை அறிவிக்கிறது.