×

இன்றைய மோதல் மும்பை Vs கோவா – ISL கால்பந்து திருவிழா

போட்டி ஆரம்பித்ததும் ஒரு நிமிடம்கூட சோர்வில்லாமல் பரபரவென்று இருக்கும் ஆட்டம் கால்பந்து. விளையாடுபவர்கள் மட்டுமல்ல, ரசிகர்களுமே டென்ஷனோடு இருப்பது கால்பந்து விளையாட்டில்தான். அதனால்தான் கால்பந்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ISL கால்பந்து போட்டிகள் ஆரம்பித்துவிட்டாலே ரசிகர்களுக்கு தினசரி கொண்டாட்டம்தான். ஒவ்வொரு மேட்ச்சைக் காண்பது மட்டுமல்ல அப்டேட் தெரிந்துகொள்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள். முதல் போட்டியில் மோதிய அணிகள் ATK Mohun Bagan vs கேரளா பிளாச்டர்ஸ். ஸ்டார் பிளேயர்ஸைக் கொண்ட அணி ATK Mohun
 

போட்டி ஆரம்பித்ததும் ஒரு நிமிடம்கூட சோர்வில்லாமல் பரபரவென்று இருக்கும் ஆட்டம் கால்பந்து. விளையாடுபவர்கள் மட்டுமல்ல, ரசிகர்களுமே டென்ஷனோடு இருப்பது கால்பந்து விளையாட்டில்தான். அதனால்தான் கால்பந்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ISL கால்பந்து போட்டிகள் ஆரம்பித்துவிட்டாலே ரசிகர்களுக்கு தினசரி கொண்டாட்டம்தான். ஒவ்வொரு மேட்ச்சைக் காண்பது மட்டுமல்ல அப்டேட் தெரிந்துகொள்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள்.

முதல் போட்டியில் மோதிய அணிகள் ATK Mohun Bagan vs கேரளா பிளாச்டர்ஸ். ஸ்டார் பிளேயர்ஸைக் கொண்ட அணி ATK Mohun Bagan. ராய்கிருஷ்ணாவின் அதிரடி கோல் ATK Mohun Bagan அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

இரண்டாம் போட்டியில் NorthEast United FC அணியை எதிர்கொண்டது மும்பை அணி. கெளஹாத்தியை மையமாகக் கொண்டது NorthEast United FC அணி. இதில், NorthEast United FC அணி 1:0 எனும் கணக்கில் மும்பையை வென்றது.

மூன்றாம் போட்டியில் கோவா அணியும் பெங்களூரூ அணியும் மோதியது. கடுமையான போட்டி யாருக்கும் வெற்றி கிடைக்காது சமனில் முடிந்தது.

நான்காம் போட்டியில் மோதிக்கொண்டவை ஒடிசா மற்றும் ஹைதராபாத் அணிகள். வெற்றி முகம் ஹைதராபாத் பக்கமே இருந்தது. 1 கோல் போட்ட ஹைதராபாத் எதிரணியை கோல் போடாமல் பார்த்துகொண்டு வெற்றியைப் பெற்றது.

ஐந்தாம் போட்டி சென்னை Vs ஜாம்ஷெட்பூர். இந்தத் தொடரில் சென்னை அணியின் முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடியது. இதன்மூலம் பாயிண்ட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இன்றைய போட்டி, கோவா அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இதில் ஏற்கெனவே தோல்வியைச் சந்தித்த மும்பை அணி பட்டியலில் முன்னேற இன்று வென்றாக வேண்டும். அதேநேரம் கோவா அணியின் முதல் போட்டியும் சமனில் முடிந்ததால், பாயிண்ட் பட்டியலில் ஆறாம் இடத்தில்தான் உள்ளது. அதனால், அதுவும் இன்றைய வெற்றிக்காக் கடுமையாகப் போராடும்.