×

இன்றைய மோதல் கோவா Vs Northeast united -இது ISL கால்பந்து திருவிழா

கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ISL கால்பந்து திருவிழா ஒவ்வொரு நாள் விறுவிறுப்பான போட்டிகளோடு நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கோவா Vs Northeast united அணிகள் மோதிக்கொள்கின்றன. இதில் Northeast united அணிக்கு இது மூன்றாவது போட்டி. இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று ஒன்றில் சமநிலையில் என்றிருக்க, பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. கேரளாவுடன் மோதிய போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டன. வெற்றிக்கான மூன்றாம் கோலைப்
 

கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ISL கால்பந்து திருவிழா ஒவ்வொரு நாள் விறுவிறுப்பான போட்டிகளோடு நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் கோவா Vs Northeast united அணிகள் மோதிக்கொள்கின்றன. இதில் Northeast united அணிக்கு இது மூன்றாவது போட்டி. இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று ஒன்றில் சமநிலையில் என்றிருக்க, பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கேரளாவுடன் மோதிய போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டன. வெற்றிக்கான மூன்றாம் கோலைப் போட இரு அணிகளாலும் முடியவில்லை. ஆட்ட நேரம் முடிவடையும் வரை இதே நிலை நீடித்தது. அதனால் போட்டி யாருக்கும் வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை என்பதாக சமனில் முடிவடைந்தது.

கோவா அணியைப் பொறுத்தவரை இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்று பாயிண்ட் டேபிளில் 10-வது இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி என்பது Northeast united அணியை விடவும் கோவாக்கு முக்கியம். அப்போதுதான் பாயிண்ட் டேபிளில் சற்றாவது முன்னேற முடியும்.

இன்று இரவு 7.30 மணிக்கு கோவா Fatorda Stadium மைதானத்தில் இரு அணிகளுக்குமான போட்டித் தொடங்குகிறது.