×

வெற்றியோடு தொடங்கியது NorthEast United FC – மும்பை தோல்வி

ஐ.எஸ்.எல் கால்பந்து திருவிழா தொடங்கி ஆட்டங்கள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று தொடங்கிய தொடர் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கிறது. இன்றைய போட்டி NorthEast United FC அணியை எதிர்கொண்டது மும்பை அணி. கெளஹாத்தியை மையமாகக் கொண்டது NorthEast United FC அணி. இதன் கேப்டன் சுபாஷிஷ் ராய் சவுத்ரி அவரே கோல்கீப்பராகவும் ஆடுபவர். இதுவரை ஒருமுறைக்குகூட கோப்பையை இது வென்றதில்லை. ஆனால், சென்ற சீசனில் லீக் சுற்றிலிருந்து அடுத்த லெவலுக்குச் சென்றது. மும்பை அணியின் கேப்டன்
 

ஐ.எஸ்.எல் கால்பந்து திருவிழா தொடங்கி ஆட்டங்கள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று தொடங்கிய தொடர் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கிறது.

இன்றைய போட்டி NorthEast United FC அணியை எதிர்கொண்டது மும்பை அணி. கெளஹாத்தியை மையமாகக் கொண்டது  NorthEast United FC அணி. இதன் கேப்டன் சுபாஷிஷ் ராய் சவுத்ரி அவரே கோல்கீப்பராகவும் ஆடுபவர். இதுவரை ஒருமுறைக்குகூட கோப்பையை இது வென்றதில்லை. ஆனால், சென்ற சீசனில் லீக் சுற்றிலிருந்து அடுத்த லெவலுக்குச் சென்றது.

மும்பை அணியின் கேப்டன் அமிர்ந்தர் சிங். இதில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியும் இதுவரை இந்தியன் சூப்பர் லீக் கோப்பையை வென்றதில்லை.

இந்தப் போட்டியில் வெற்றி மும்பை பக்கம் இருப்பதாகவே பலரின் கணிப்புகள் இருந்தன. அதற்கேற்றவாறே மும்பை அணியின் ஆட்டம் இருந்தது. NorthEast United FC அணி வீரர்களும் கோல் அடிப்பதை வெகுவாகத் தடுத்தார்கள்.

இன்றைய ஆட்டத்தின் மிக முக்கிய திருப்புமுனை ரெட் கார்டு அமைந்துவிட்டது. ஆமாம். NorthEast United FC வீரரிடம் மோசமாக நடந்துகொண்டதால், மும்பை அணி வீரர் அஹமத் ஜஹூவுக்கு ரெட் கார்டு கொடுத்தார் ரெஃப்ரி. இந்த அதிரடி முடிவால் மும்பைக்கு பெரும் பின்னடைவானது. ஆயினும் ஆட்டத்தை தங்கள் பக்கமே வைத்திருந்தது மும்பை.

இரண்டாம் பாதியில் மும்பை செய்த தவறால், NorthEast United FC க்கு பெனாலிட்டி வாய்ப்பு கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்தி, NorthEast United FC வீரர் வேஸி அப்பையா கோல் அடித்தார். இறுதியாக NorthEast United FC அணி 1:0 எனும் கணக்கில் மும்பையை வென்று, இந்தத் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.