×

மும்பை vs NorthEast United FC – இன்றைய கால்பந்து மோதல்

கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போலவே கால்பந்துக்கு ஐஎஸ்எல் தொடர். நேற்று அட்டகாசமாக தொடங்கி விட்டது. நேற்றைய போட்டியில் மோதிய அணிகள் ATK Mohun Bagan vs கேரளா பிளாச்டர்ஸ். ஸ்டார் பிளேயர்ஸைக் கொண்ட அணி ATK Mohun Bagan. போட்டி ஆரம்பித்து ஒரு மணி நேரமாகியும் இரு தரப்பிலிருந்தும் கோல் ஏதும் அடிக்க வில்லை. இது இன்னும் போட்டியைப் பரபரப்பாக்கியது. ஆட்டத்தின் 67 வது நிமிடத்தில் கேரளா வீரர்களைச் சமாளித்து கண் இமைக்கும் நேரத்தில் கோல் அடித்தார் ராய்
 

கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போலவே கால்பந்துக்கு ஐஎஸ்எல் தொடர். நேற்று அட்டகாசமாக தொடங்கி விட்டது. நேற்றைய போட்டியில் மோதிய அணிகள் ATK Mohun Bagan vs கேரளா பிளாச்டர்ஸ். ஸ்டார் பிளேயர்ஸைக் கொண்ட அணி ATK Mohun Bagan. 

போட்டி ஆரம்பித்து ஒரு மணி நேரமாகியும் இரு தரப்பிலிருந்தும் கோல் ஏதும் அடிக்க வில்லை. இது இன்னும் போட்டியைப் பரபரப்பாக்கியது. ஆட்டத்தின் 67 வது நிமிடத்தில் கேரளா வீரர்களைச் சமாளித்து கண் இமைக்கும் நேரத்தில் கோல் அடித்தார் ராய் கிருஷ்ணா. ராய்கிருஷ்ணாவின் இந்த கோல் ATK Mohun Bagan அணிக்கு வெற்றியைத் தேடித்தந்திருக்கிறது.

இன்றைய போட்டி NorthEast United FC அணியோடு மோதுகிறது மும்பை அணி. கெளஹாத்தியை மையமாகக் கொண்டது  NorthEast United FC அணி. இதன் கேப்டன் சுபாஷிஷ் ராய் சவுத்ரி அவரே கோல்கீப்பராகவும் ஆடுபவர். இதுவரை ஒருமுறைக்குகூட கோப்பையை இது வென்றதில்லை. ஆனால், சென்ற சீசனில் லீக் சுற்றிலிருந்து அடுத்த லெவலுக்குச் சென்றது.

மும்பை அணியின் கேப்டன் அமிர்ந்தர் சிங். இதில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியும் இதுவரை இந்தியன் சூப்பர் லீக் கோப்பையை வென்றதில்லை.

இரு அணிகளும் இந்த சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என முடிவில் இருப்பதால் இன்றைய போட்டியில் நிச்சயம் பரபரப்பு இருக்கும். தொடக்கப் போட்டி என்று அலட்சியமாக இருக்க மாட்டார்கள் என்றே பலரும் கணித்திருக்கிறார்கள்.