×

மூன்று வெற்றிகளோடு atk mohun bagan அணி இரண்டாம் இடம் – ISL திருவிழா அப்டேட்

ஐபிஎல் போட்டிகள் எப்படி கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தினமும் மாலை நேரத்தை மகிழ்ச்சிப்படுத்தியதோ, அதேபோல கால்பந்து ரசிகர்களுக்கு அமைந்துவிட்டது ISL திருவிழா. ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்போடு, யார் வெல்வார்… யார் தோற்பார் என்பது போட்டியின் இறுதி நிமிடம் வரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் atk mohun bagan அணியும் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி கோவா ஃபேட்ர்டா மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தில் 54 வது நிமிடத்தில் atk mohun bagan அணியின் மன்வீர்
 

ஐபிஎல் போட்டிகள் எப்படி கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தினமும் மாலை நேரத்தை மகிழ்ச்சிப்படுத்தியதோ, அதேபோல கால்பந்து ரசிகர்களுக்கு அமைந்துவிட்டது ISL திருவிழா.

ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்போடு, யார் வெல்வார்… யார் தோற்பார் என்பது போட்டியின் இறுதி நிமிடம் வரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் atk mohun bagan அணியும் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி கோவா ஃபேட்ர்டா மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தில் 54 வது நிமிடத்தில் atk mohun bagan அணியின் மன்வீர் சிங் அடித்த கோலால் இந்த அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதிலடியாக ஹைதராபாத் அணியின் விக்டர் 65 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதனால் நேற்றைய போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆனாலும் மூன்று வெற்றிகளோடு atk mohun bagan அணி பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் ஆடி ஒன்றில் வெற்றி மூன்றில் டிராவாக்கி ஐந்தாம் இடத்தில் உள்ளது.

மும்பை சிட்டி அணி தான் ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. மார்ச் வரை இந்தப் போட்டிகள் நடக்கும் என்றாலும் தொடர் வெற்றியே முதல் நான்கு இடங்களில் அணிகளைத் தக்க வைக்க செய்யும்.