×

3 கோல்கள் அடித்து கோவா வெற்றி – வீழ்ந்தது கேரளா

இந்திய கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டமான ISL கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஒரு விறுவிறுப்பான போட்டியால் ரசிகர்கள் மாலை நேரத்தை கொண்டாடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் கோவா அணிக்கும் கேரளா அணிக்கும் இடையே நடைபெற்றது. கோவா ஃபாடோர்டா மைதானத்தில் நேற்றிரவு தொடங்கிய கோவா vs கேரளா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் கோவா மூன்று கோல்களையும், கேரளா ஒரு கோலையும் அடித்தது. இதனால் கோவா அணி அற்புதமான வெற்றியை ருசித்தது. கோவாவின் இந்த வெற்றியால் 4
 

இந்திய கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டமான ISL கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஒரு விறுவிறுப்பான போட்டியால் ரசிகர்கள் மாலை நேரத்தை கொண்டாடி வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் கோவா அணிக்கும் கேரளா அணிக்கும் இடையே நடைபெற்றது.

கோவா ஃபாடோர்டா மைதானத்தில் நேற்றிரவு தொடங்கிய கோவா vs கேரளா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் கோவா மூன்று கோல்களையும், கேரளா ஒரு கோலையும் அடித்தது.

இதனால் கோவா அணி அற்புதமான வெற்றியை ருசித்தது. கோவாவின் இந்த வெற்றியால் 4 ஆட்டங்களில் ஆடி, அதில் ஒன்றில் வென்று இரண்டில் டிராவாகி, ஒன்றில் தோற்று 5 இடத்தைத் தக்க வைத்துக்கொண்டது.

கேரளா அணியோ, நான்கு போட்டிகளில் ஆடி, எதிலுமே வெல்ல வில்லை. 2 போட்டிகளில் டிராவாக்கியது. இரண்டு போட்டிகளில் தோற்றது. இதனால், கேரளா அணி தற்போதைய நிலவரப்படி பாயிண்ட் டேபிளில் 9-ம் இடத்தில் பின் தங்கி உள்ளது.