×

இன்று வெற்றி பெற்று atk mohun bagan முதலிடம் செல்லுமா? – ISL கால்பந்து திருவிழா

ஒவ்வொரு நாளும் isl கால்பந்து திருவிழா போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் மாலையில் கால்பந்து ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விருந்தாக போட்டிகள் அமைகின்றன. நேற்று ஹைதராபாத் அணிக்கும் மும்பை சிட்டிக்கும் நடந்த போட்டியில் மும்பை சிட்டி 2 கோல்கள் அடித்தன. இறுதிவரை ஹைதராபாத் அணியால் கோல் அடிக்கவே முடியவில்லை. இதனால் எளிதாக வென்றது மும்பை சிட்டி. இந்த வெற்றி மூலம் மும்பை சிட்டி பாயிண்ட் டேபிளில் தனது முதல் இடத்தை அழுத்தமாகப் பதிவு செய்துகொண்டது. இன்றைய போட்டி
 

ஒவ்வொரு நாளும் isl கால்பந்து திருவிழா போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் மாலையில் கால்பந்து ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விருந்தாக போட்டிகள் அமைகின்றன.

நேற்று ஹைதராபாத் அணிக்கும் மும்பை சிட்டிக்கும் நடந்த போட்டியில் மும்பை சிட்டி 2 கோல்கள் அடித்தன. இறுதிவரை ஹைதராபாத் அணியால் கோல் அடிக்கவே முடியவில்லை. இதனால் எளிதாக வென்றது மும்பை சிட்டி. இந்த வெற்றி மூலம் மும்பை சிட்டி பாயிண்ட் டேபிளில் தனது முதல் இடத்தை அழுத்தமாகப் பதிவு செய்துகொண்டது.

இன்றைய போட்டி atk mohun bagan அணிக்கும் பெங்களூரூ அணிக்கும் இடையே இரவு 7.30 மணிக்கு கோவாவில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே வலுவானவை என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

atk mohun bagan அணி இதுவரை 6 போட்டிகளில் ஆடி, 4 போட்டிகளில் வென்று ஒன்றில் தோற்று, ஒன்றை டிராவாக்கி 13 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் atk mohun bagan அணி சென்றால், 3 புள்ளிகளோடு முதலிடத்திற்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

பெங்களூரூ அணியைப் பொறுத்தவரை 6 போட்டிகளில் ஆடி 3 -ல் வென்று மூன்றில் தோற்று 12 புள்ளிகளோடு 3 -ம் இடத்தில் உள்ளது. இன்று பெங்களூரூ அணி வென்றால் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.

இன்னும் சில மணி நேரங்களில் யாருக்கு வெற்றி என்பது தெரிந்துவிடும்.