×

“விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் உறுதி” – குடியரசு தலைவர் வாழ்த்துரை

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார். குடியரசு தின உரையாற்றிய அவர், “மோசமான இயற்கை பேரழிவுகள், கொரோனா தொற்றின்போதும் விவசாய பெருமக்கள் உணவுத்தேர்வையை பூர்த்தி செய்தனர், விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. ராணுவ வீரர்களின் துணிச்சல், தேசபக்தி மற்றும் தியாகத்தால் பெருமை படுகிறேன். விண்வெளி முதல் வயல்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் வரை நம் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. மிகக்குறுகிய காலத்திலேயே கொரோனா தடுப்பூசியை உருவாக்கி
 

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

குடியரசு தின உரையாற்றிய அவர், “மோசமான இயற்கை பேரழிவுகள், கொரோனா தொற்றின்போதும் விவசாய பெருமக்கள் உணவுத்தேர்வையை பூர்த்தி செய்தனர், விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. ராணுவ வீரர்களின் துணிச்சல், தேசபக்தி மற்றும் தியாகத்தால் பெருமை படுகிறேன். விண்வெளி முதல் வயல்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் வரை நம் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. மிகக்குறுகிய காலத்திலேயே கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் வரலாறு படைத்துள்ளனர். விவசாயிகள், இளைஞர், விஞ்ஞானிகள் அனைவருக்கும் குடியரசுத்தின வாழ்த்துக்கள்.

சுமார் 15 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கொரோனா காலத்திலும் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை. நீதித்துறை தொழிநுட்பத்தின் உதவியுடன் சிறப்பாக செயலாற்றியது. எனது பார்வையில் 2020 ஆம் ஆண்டு ஒரு கற்றல் ஆண்டாக அமைந்தது. கொரோனா இயற்கையை மீட்டெடுத்தது. அண்மையில் வேளாண் மற்றும் தொழிலாளர் துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக சில அச்சங்கள் ஏற்பட்டுள்ளன. கொரோனா காலத்திலும் பீகார் மற்றும் காஷ்மீரில் தேர்தலை நடத்தியது நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாதனை.

வீடில்லாதவர்களுக்கு வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற சிறப்பான இலக்குகளை நோக்கி நகர்வதன் மூலம் வரலாற்றில் ஒரு மைல் கல்லை எட்டுவோம். 2020 இல் அறிவிக்கப்பட்ட ‘தேசிய கல்வி கொள்கை’ தொழில்நுட்பத்திற்கும் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது” எனக் கூறினார்.