×

“தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மேடையில் நடந்த திருமணம்” : வியக்க வைக்கும் சம்பவம்!

ஜித்தீஷும் திருமணம் செய்து கொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஆண் குழந்தையும் உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதி கடந்த 30 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் மகன்
 

ஜித்தீஷும் திருமணம் செய்து கொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஆண்  குழந்தையும் உள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த  ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதி கடந்த 30 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் மகன்  ஜித்தீஷும் திருமணம் செய்து கொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஆண்  குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில் கக்ரா கிராமத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் குடும்பம் நடத்தி வருவதை அறிந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தங்களது  செலவில் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி  ராம்லால் மற்றும் ஷாக்கோரி மற்றும் அவரது மகன்  ஜித்தீஷ் – அருணா திருமணமும் கிறிஸ்துவ முறைப்படி  ஒரே மேடையில் நடந்துள்ளது.  மகன், பேரன் முன்னிலையில் ராம்லால் 30 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.