×

“குட்டிகளுடன் நடந்து சென்ற சிங்கம்…எதிரே பைக்கில் வந்த நபர்” அடுத்து என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

சரணாலயத்திற்கு அருகிலுள்ள இடத்தில் எடுக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தில் 1,400 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ள கிர் காடுகளில் சிங்கங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள இடத்தில் எடுக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. This #viralvideo shows a #Lioness & two cubs moving away to give way
 

சரணாலயத்திற்கு அருகிலுள்ள இடத்தில்  எடுக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குஜராத்தில் 1,400 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ள கிர் காடுகளில் சிங்கங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள இடத்தில்  எடுக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதாவது பெண் சிங்கம் ஒன்று தனது இரண்டு குட்டிகளுடன் கிர் காடுகளையொட்டியுள்ள  மண் சாலையில் நடந்து செல்கிறது. அப்போது அந்த வழியே  பைக்கில் வரும்  விவசாயி ஒருவர் எதிர் பக்கத்தில் சிங்கம் குட்டிகளுடன் வருவதை பார்த்து நின்று விடுகிறார்.

அவரைப் பார்த்ததும், சிங்கம் ஒதுங்கி அமைதியாக சாலையிலிருந்து  காட்டுக்குள்  செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வர,  மனிதர்களே வனவிலங்குகளையும் அவற்றின் இடத்தையும் மதியுங்கள் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.