×

‘நோ பார்க்கிங்’கில் நிற்கும் வண்டிகளைப் போட்டுக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் !

போக்குவரத்து விதிகளை மீறி நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வண்டிகளைக் கண்டறிந்து புகார் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் டெல்லியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. சாலையில் நடப்பது கூட கடினமாகி வருகிறது. நோ பார்க்கிங்கில் நிற்கும் வாகனங்கள் காரணமாகவே சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய
 

போக்குவரத்து விதிகளை மீறி நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வண்டிகளைக் கண்டறிந்து புகார் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும்

டெல்லியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. சாலையில் நடப்பது கூட கடினமாகி வருகிறது. நோ பார்க்கிங்கில் நிற்கும் வாகனங்கள் காரணமாகவே சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர், “நோ பார்க்கிங்கில் சாலை விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றைப் பரிசீலித்து வருகிறது. கனரக வாகனங்களை நகரின் மையப்பகுதிகளில் கட்டுப் படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறி நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வண்டிகளைக் கண்டறிந்து புகார் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு விரைவில் அதற்கான சட்டம் ஒன்றை இயக்கவுள்ளது என்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்காகப் பல வங்கிகள் நிதி வழங்கத் தயாராக உள்ளது என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.