×

‘சிஷ்யையுடன் கரீபியன் தீவுக்கு எஸ்கேப்பான நித்தியானந்தா’…‘இன்டர்போல்’ போலீஸ் உதவியை நாட உயர்நீதிமன்றம் உத்தரவு!

தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர், நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அவரது மகள் நந்திதாவோ, எங்களை யாரும் கடத்தவில்லை. விருப்பப்பட்டு தான் அங்கு இருக்கிறேன்’ என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரத்தில் ப்ராணப் பிரியா,
 

தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத்  உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

நித்தியானந்தாவின்  தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர், நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத்  உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆனால்  அவரது மகள் நந்திதாவோ, எங்களை  யாரும் கடத்தவில்லை. விருப்பப்பட்டு தான் அங்கு இருக்கிறேன்’ என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரத்தில் ப்ராணப் பிரியா, பிரிய தத்துவா என்ற ஆசிரம நிர்வாகிகளை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார்  கைது செய்துள்ளனர்.  

இதுவொருபுறமிருக்க பாஸ்போர்ட் காலாவதியாகியுள்ளதால்  நித்தியானந்தா, ஜனார்த்தனா ஷர்மா மகள் நந்திதாவுடன்  தரை வழியாக நேபாளம் சென்று, அங்கிருந்து கரீபியன் தீவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஜனார்த்தனா ஷர்மா  தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த குஜராத்  உயர் நீதிமன்றம், நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க ‘இன்டர்போல்’ மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியை உடனடியாக நாடுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட  ஜனார்த்தனா ஷர்மா இளையமகள், நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் பாலியல் தொல்லை நடக்கிறது. ரஞ்சிதாவுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.