×

‘அரசு வாகனங்களுக்கு டீசல் கிடையாது.. பெட்ரோல் பங்க் கெடுபிடி’… பேருந்தில் பயணம் செய்த புதுவை அமைச்சர் !

புதுச்சேரி நிறுவனமான அமுத சுரபி பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது. அதன் மூலம் புதுவை அரசின் வாகனங்களுக்கு இந்நிறுவனம் எரிபொருள் வழங்குகிறது. புதுச்சேரி நிறுவனமான அமுத சுரபி பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது. அதன் மூலம் புதுவை அரசின் வாகனங்களுக்கு இந்நிறுவனம் எரிபொருள் வழங்குகிறது. அதற்கான தொகையைப் புதுவை அரசு செலுத்திவிடும். முதல்வர், அமைச்சர், வாரிய தலைவர்கள், ஆட்சியர், காவல்துறை உள்ளிட்ட அந்த அனைத்து வாகனங்களும் இங்கேயே பெட்ரோல் , டீசல் நிரப்புவதால் அதன் நிலுவைத் தொகை
 

புதுச்சேரி நிறுவனமான அமுத சுரபி பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது. அதன் மூலம் புதுவை அரசின் வாகனங்களுக்கு இந்நிறுவனம் எரிபொருள் வழங்குகிறது.

புதுச்சேரி நிறுவனமான அமுத சுரபி பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது. அதன் மூலம் புதுவை அரசின் வாகனங்களுக்கு இந்நிறுவனம் எரிபொருள் வழங்குகிறது. அதற்கான தொகையைப் புதுவை அரசு செலுத்திவிடும். முதல்வர், அமைச்சர், வாரிய தலைவர்கள், ஆட்சியர், காவல்துறை உள்ளிட்ட அந்த அனைத்து வாகனங்களும் இங்கேயே பெட்ரோல் , டீசல் நிரப்புவதால் அதன் நிலுவைத் தொகை சுமார் ரூ.2 கோடியை எட்டியுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் புதுச்சேரியிலிருந்து கடந்த வியாழக்கிழமை இரவு காரைக்கால் செல்வதற்காக டீசல் நிரப்பி வருமாறு அவரின் டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த பங்கில் ஏற்கனவே இருக்கும் நிலுவைத் தொகையின் காரணமாக  டீசல் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு வாகனத்திலிருந்த டீசலை பயன்படுத்தி காரைக்கால் சென்ற அமைச்சர், வெள்ளிக்கிழமை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரிக்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து புதுச்சேரி சென்றுள்ளார். 

இது குறித்துப் பேசிய அமைச்சரின் செய்தித் தொடர்பாளரான முருகபூபதி, ” அந்த பெட்ரோல் பங்கின் நிலையைப் புரிந்து கொண்டு இரண்டு, மூன்று முறை தனது சொந்த செலவில் டீசல் போட்டுக்கொண்டு சென்றுள்ளார். ஆனால், வாரத்திற்கு 3 முறை  புதுவை தலைமைச்செயலகம் செல்ல வேண்டியிருப்பதால் சொந்த செலவில் டீசல்  போட முடியாது என்று அரசு வாகனத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கச் சொல்லி விட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதனை ஏற்க மறுத்தபோதும், அங்கு வாகனத்தை ஒப்படைத்து விட்டோம். அதனால், அமைச்சர் பேருந்தில் பயணம் செய்தார்” என்று கூறியுள்ளார். 

.