×

ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் பல தகவல்கள் அம்பலம்; வருமான வரித்துறையும் குறுக்கு விசாரணை!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்கக் கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக
 

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்கக் கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது.

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் கொச்சியில் உள்ள என். ஐ. ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஸ்வப்னா சுரேஷ்க்கு மற்றும் சந்தீப் நாயருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று ஸ்வப்னாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ வுக்கு நீதிமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதாவது, கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோவையில் 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் இரண்டு பேரும் ரமீஷிடம் தங்கம் வாங்கியது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அவர்களிடம் இருந்து பல தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் விசாரணையைத் தொடர்ந்து வரும் இந்த நிலையில், வருமான வரித்துறையினரும் என்.ஐ.ஏ அலுவலகத்துக்குச் சென்று குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.