×

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் விவகாரத்தில் அற்ப அரசியலில் ஈடுபடாதீங்க…. சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ரயில்வே யூனியன்..

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் கட்டண விவகாரத்தில் அற்ப அரசியலில் ஈடுபடாதீங்க என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்து அனைத்து இந்திய ரயில்வேமென் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. லாக்டவுனால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேரமுடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தின. இதனையடுத்து மத்திய அரசு ரயில்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப
 

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் கட்டண விவகாரத்தில் அற்ப அரசியலில் ஈடுபடாதீங்க என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்து அனைத்து இந்திய ரயில்வேமென் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

லாக்டவுனால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேரமுடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தின. இதனையடுத்து மத்திய அரசு ரயில்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்தது. 

இதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டின. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, குஜராத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ரூ.100 கோடி செலவிட்டது மற்றும் பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு ரயில்வே ரூ.151 கோடி வழங்கியது. ஆனால் அவர்களால் ஏழைகளுக்கு இலவச பயணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய அரசு ரயில் பயண கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வே வழங்குகிறது. எஞ்சிய 15 சதவீத பயண கட்டணத்தை மட்டுமே மாநில அரசுகள் செலுத்த வேண்டும். தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் கட்டண விவகாரத்தில் அற்ப அரசியலில் ஈடுபடவேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனைத்து இந்திய ரயில்வேமென் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அந்த கூட்டமைப்பின் பொது செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா,  சோனியா காந்திக்கு எழுதிய அந்த கடிதத்தில், தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது. ஆனால் ரயில்வே பணியாளர்கள் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் அதனை சாத்தியமாக்கி உள்ளனர். அற்ப அரசியல் ஆதாய பலன்களுக்காக ஒரு சிறந்த அமைப்பை சீர்குலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது 115 சிறப்பு ரயில்களில் புலம்பெயர்ந்தவர்களை சொந்த ஊருக்கு திரும்புவதற்கு உதவுகிறது. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவே ரயில்வே கட்டணம் வசூலித்தது. ரயில் நிலையங்களில் கூட்டம் கூடினால் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழி வகுக்கும் என அதில் தெரிவித்துள்ளார்.