×

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: மொத்த குடும்பத்தையும் இழந்த 8 வயது சிறுமி ; கலங்க வைக்கும் சம்பவம்!

சாலை போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான ஓடுதள பாதையையும் நீர் சூழ்ந்துள்ளது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் மும்பை மழையில் 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த ஆறு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மட்டுமில்லாமல்
 

சாலை போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான ஓடுதள பாதையையும் நீர் சூழ்ந்துள்ளது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு  ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்

மும்பை மழையில் 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் கடந்த ஆறு  நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான ஓடுதள பாதையையும் நீர் சூழ்ந்துள்ளது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு  ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் 203 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் நேற்று  அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 8 வயதான  பெண் குழந்தை பிரியா நானாவரே தனது மொத்த குடும்பத்தையும் இழந்துள்ளார்.  இந்த சம்பவத்தில் பிரியாவின்  தந்தை, தாய் மற்றும் சகோதரிகள் ஆகிய அனைவரும் விபத்தில் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து கூறும் அவரது உறவினர், ‘ தாத்தா- பாட்டி வீட்டிலிருந்த பிரியா சம்பவத்தன்று தான் வீட்டிற்கு வந்தார். அவளது குடும்பத்திலிருந்த அனைவரும் இறந்துவிட்டனர். பிரியா மட்டும் சிறு காயங்களுடன் தப்பித்து விட்டார்’ என்றார்.  8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தையே இழந்து நிர்க்கதியாக உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.