×

வெட்டியாக 3,360 வி.ஐ.பி.களுக்கு வழங்கி வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

2017ல் ஆண்டில் நாடு முழுவதும் தேவையில்லாமல் 3,360 வி.ஐ.பி.களுக்கு வழங்கி வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (பி.பி.ஆர்.டி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரபலமான தனிநபர்களுக்கு போன்ற வி.ஐ.பி.களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 2017ல் போலீஸ் பாதுகாப்பு பெரும் வி.ஐ.பி.களின் எண்ணிக்கை 17,468ஆக குறைந்துள்ளது. 2016ல் 20,828 வி.ஐ.பி.களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்ததாக மத்திய உள்துறை
 

2017ல் ஆண்டில் நாடு முழுவதும் தேவையில்லாமல் 3,360 வி.ஐ.பி.களுக்கு வழங்கி வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (பி.பி.ஆர்.டி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரபலமான தனிநபர்களுக்கு போன்ற வி.ஐ.பி.களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 2017ல் போலீஸ் பாதுகாப்பு பெரும் வி.ஐ.பி.களின் எண்ணிக்கை 17,468ஆக குறைந்துள்ளது. 2016ல் 20,828 வி.ஐ.பி.களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்ததாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்ட அமைப்பான பி.பி.ஆர்.டி. வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்தது.

போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ல் போலீஸ் பாதுகாப்பில் உள்ள வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில்தான் குறைந்துள்ளது. 2016ல் உத்தர பிரதேசத்தில் 1,901 வி.ஐ.பி.க்கள் போலீஸ் பாதுகாப்பில் இருந்தனர். ஆனால் 2017ல் போலீஸ் பாதுகாப்பில் உள்ள வி.ஐ.பி.களின் எண்ணிக்கை 110ஆக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசத்தில் குறிப்பாக 2017 மார்ச்க்கு பிறகுதான் போலீஸ் பாதுகாப்பு பெறும் வி.ஐ.பி.களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அந்த காலகட்டத்தில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. மேலும் போலீஸ் பாதுகாப்பை அந்தஸ்தாக அனுபவிப்பவர்கள் அதனை இழக்க தயாராக இருக்க வேண்டும் என முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்ற சமயத்தில் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அம்மாநில டி.ஜி.பி. ஓ.பி. சிங் கூறுகையில், பாதுகாப்பு வழங்குவதில் நாங்கள் கடுமையாக உள்ளோம். பாதுகாப்பை அந்தஸ்தாக (பெருமையாக) நினைக்காதவர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறோம் என தெரிவித்தார்.