×

வீடு இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கு தேவையானதை செய்ய மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

வீடு இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி: வீடு இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 84 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டிலுள்ள
 

வீடு இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி: வீடு இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 84 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் வீடு இல்லாதவர்களும், புலம்பெயர்ந்த பணியாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களுக்கு உணவு கிடைப்பதிலும், தங்கும் இடம் கிடைப்பதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. அத்துடன் போலீசார் சிலரும் இத்தகைய நபர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் வீடற்றோர், புலம்பெயர்ந்த பணியாளர்கள் ஆகியோருக்கு தற்காலிகமாக தங்குமிடங்கள், உணவு, உடை, மருத்துவ கண்காணிப்பு ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரும்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.