×

விருப்பு ஓய்வு திட்ட பணிகள் முடிந்த பிறகு, 4ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்……..

பணியாளர்களுக்கான விருப்பு ஓய்வு திட்ட பணிகள் முடிந்த பிறகு பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபடும் என தகவல் வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தனது ஊழியர்களுக்கு சம்பளம் போடவே அது படாதபாடு பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாருக்கு விற்கப்படுமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாருக்கு விற்கப்படாது என மத்திய
 

பணியாளர்களுக்கான விருப்பு ஓய்வு திட்ட பணிகள் முடிந்த பிறகு பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபடும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான  பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தனது ஊழியர்களுக்கு சம்பளம் போடவே அது படாதபாடு பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாருக்கு விற்கப்படுமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாருக்கு விற்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையில் களம் இறங்கியது.

அதன் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வு திட்டத்தை (வி.ஆர்.எஸ்.) கொண்டு வந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சுமார் 1.6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் அந்த நிறுவனத்தை சேர்ந்த மொத்தம் 78,300 பணியாளர்கள் வி.ஆர்.ஆஸ்.க்கு அப்ளை செய்துள்ளதாக தகவல். இந்த விருப்பு ஓய்வு திட்டத்தால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடி மிச்சமாகும்.

பணியாளர்களின் விருப்பு ஓய்வு திட்ட நடைமுறைகள் முடிவடைந்தபிறகு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்கான நடவடிக்கையில் களமிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.