×

விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடுதிக்கு வசூலிக்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் கட்டணத்தை திடீரென ரூ. 6,500 ஆக பல்கலைக்கழகம் உயர்த்தியது. இதனை கண்டித்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் உணவு உண்ணும் பகுதியில் ஆடை கட்டுப்பாடு, 24 மணிநேரமும் இயங்கிவந்த
 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடுதிக்கு வசூலிக்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் கட்டணத்தை திடீரென ரூ. 6,500 ஆக பல்கலைக்கழகம் உயர்த்தியது. இதனை கண்டித்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் உணவு உண்ணும் பகுதியில் ஆடை கட்டுப்பாடு, 24 மணிநேரமும் இயங்கிவந்த நூலகம் மற்றும் கேன்டீன் நேரம் குறைப்பு, விடுதிக்கு இரு தரப்பு மாணவர்கள் செல்லும் நேரத்தில் கட்டுப்பாடு, பூங்காவில் மாணவர்கள் செல்ல கட்டுப்பாடு போன்றவற்றை கண்டித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 
 

இந்நிலையில் இன்று பல்கலைக்கழகத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், கலந்துகொண்ட பட்டமளிப்பு விழா நடைபெற்றதால் மாணவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. விழா நடைபெறும் இடத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றதால் காவல்துறையினர் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் go back delhi police என்று முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.