×

வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! ஒரு கிராம் ரூ.3,835 மட்டுமே! இது போக ரூ.50 தள்ளுபடி! தங்க பத்திரத்தை சீக்கிரம் வாங்குங்க

இந்த நிதியாண்டில் 6வது கட்டமாக தங்க பத்திரத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ஒரு கிராம் ரூ.3,835 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவில்தான் நடைபெறுகிறது. இதனால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நம்மவர்கள் தங்கத்தை ஆபரணமாக மட்டும் கருதுவதில்லை அதனை சிறந்த முதலீடாகவும் கருதுவதால் தங்கத்தை முடிந்த அளவு வாங்கி வைக்கின்றனர். இதனால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கிறது. தங்கம் இறக்குமதியால் மத்திய அரசுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை.
 

இந்த நிதியாண்டில் 6வது கட்டமாக தங்க பத்திரத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ஒரு கிராம் ரூ.3,835 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவில்தான் நடைபெறுகிறது. இதனால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நம்மவர்கள் தங்கத்தை ஆபரணமாக மட்டும் கருதுவதில்லை அதனை சிறந்த முதலீடாகவும் கருதுவதால் தங்கத்தை முடிந்த அளவு வாங்கி வைக்கின்றனர். இதனால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கிறது. தங்கம் இறக்குமதியால் மத்திய அரசுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. இறக்குமதியால் அன்னிய செலாவணி கையிருப்புதான் காலியாகிறது. மேலும் மக்களும் தங்கத்தை வாங்கி பாதுகாப்பாக பெட்டிகளில்தான் பூட்டி வைக்கின்றனர்.

தங்கம் இறக்குமதியை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தங்க டெபாசிட், தங்க பத்திரம் திட்டங்களை 2015 நவம்பரில் அறிமுகம் செய்தது. தங்க பத்திரம் திட்டம் என்பது தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக காகித வடிவில் பத்திரமாக வாங்கி கொள்ளலாம். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் அரை கிலோ அளவுக்கு தங்க பத்திரத்தை வாங்கி கொள்ளலாம். தங்க பத்திர வெளியீட்டுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இதனால் மத்திய அரசு தொடர்ந்து தங்க பத்திர வெளியீட்டை மேற்கொண்டு வருகிறது. இந்த நிதியாண்டில் இதுவரை 5 முறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 6வது கட்டமாக தங்க பத்திரத்தை நேற்று வெளியிட்டது. தீபாவளியை முன்னிட்டு நடைபெறும் இந்த வெளியீட்டில் ஒரு கிராம் ரூ.3,835 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வாயிலாக அப்ளை மற்றும் டிஜிட்டல் வழிமுறையில் பணம் செலுத்தி தங்க பத்திரம் வாங்குபவர்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. வரும் 25ம் தேதி வரை இந்த தங்க பத்திர வெளியீ்ட்டில் மக்கள் முதலீடு செய்யலாம்.