×

வாயு புயல் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல்!

அரபிக்கடலில் உருவாகியிருக்கும் வாயு புயல் காரணமாக, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. குஜராத்: அரபிக்கடலில் உருவாகியிருக்கும் வாயு புயல் காரணமாக, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் தீவிரமாகியுள்ளது. இது குஜராத்தின் போர்பந்தர், மஹுவா பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சுமார் 135
 

அரபிக்கடலில் உருவாகியிருக்கும் வாயு புயல் காரணமாக, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

குஜராத்: அரபிக்கடலில் உருவாகியிருக்கும் வாயு புயல் காரணமாக, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் தீவிரமாகியுள்ளது. இது  குஜராத்தின் போர்பந்தர், மஹுவா பகுதியில்  நாளை கரையைக் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது  சுமார் 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ராஜ்கோட், ஜாம் நகர், போர்பந்தர், துவாரகா, ஜூனாகத், ராஜ்கோட், பாவ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வரும் 15 ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் வாயு புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக  24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு படை குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.