×

வயலின் கலைஞர் பாலபாஸ்கர்  வாரிசோடு மரணம் விபத்தா ?-சிபிஐ விசாரணையில் சிக்குமா ?  

புகழ்பெற்ற வயலின் கலைஞரான பால பாஸ்கர் மற்றும் அவரது மகள் 2018 ல் கார் விபத்தில் மரணம் அடைந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது கேரளா, டிசம்பர் 10: 2018 செப்டம்பர் 25 ஆம் தேதி கார் விபத்தில் இறந்த இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது மகளின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய அவரது தந்தையின் புகாரின் பேரில்
 

புகழ்பெற்ற வயலின் கலைஞரான பால பாஸ்கர் மற்றும் அவரது மகள் 2018 ல் கார் விபத்தில் மரணம் அடைந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
கேரளா, டிசம்பர் 10: 2018 செப்டம்பர் 25 ஆம் தேதி கார் விபத்தில் இறந்த இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது மகளின்  மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய அவரது தந்தையின் புகாரின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, அவரது தந்தை உன்னி கூறுகையில், “இது ஒரு சாலை விபத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று குற்றப்பிரிவு விசாரணைக் குழு பாரபட்சம் காட்டியதாக நாங்கள் உணர்ந்தோம், எங்களிடம் இருந்த சில சந்தேகங்களை நாங்கள் அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தாலும் கூட,  இங்குள்ள விமான நிலையங்கள் வழியாக நடந்த தங்கக் கடத்தல் வழக்கில் எனது மகனின் இசைக் குழுவில் இருந்த ஒரு சில உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக எங்களுக்கு பின்னர்  செய்தி கிடைத்தது .

விபத்து நடந்த பின்னர், அவரது நண்பர்கள் எங்களை எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்திருந்ததால் எங்கள் சந்தேகங்கள் அதிகரித்தன. எனவே இப்போது  உண்மையில் என்ன நடந்தது என்பதை சிபிஐ கண்டுபிடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் . “