×

வட்டி வருவாய் சூப்பர்.. மணப்புரம் பைனான்ஸ் லாபம் ரூ.398 கோடியாக உயர்ந்தது…

மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.398 கோடி ஈட்டியுள்ளது. வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.398.20 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 44 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிகர லாபமாக ரூ.277.39 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய்
 

மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.398 கோடி ஈட்டியுள்ளது.

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.398.20 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 44 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிகர லாபமாக ரூ.277.39 கோடி ஈட்டியிருந்தது.

கடந்த மார்ச் காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,618.15 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,166.51 கோடியாக இருந்தது. 2020 மார்ச் காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் வட்டி வருவாய் மட்டும் ரூ.1,471.91 கோடியாகும்.

2019 மார்ச் காலாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் வட்டி வருவாய் ரூ.1,085.80 கோடியாக இருந்தது. மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு வட்டி வருவாய் சிறப்பாக இருந்தது முக்கிய காரணம். கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 56 சதவீதம் அதிகரித்து ரூ.1,618.15 கோடியாக உயர்ந்துள்ளது.