×

ரோடு நல்லா இருக்கப்போய்தான் விபத்து நடக்கு! கர்நாடக துணை முதல்வரின் அதிரடி பதிலில் அசந்து போன செய்தியாளர்கள்

சாலைகள் நல்லா இருப்பதால்தான் விபத்துக்கள் நடப்பதாக கூறி, கேள்வி கேட்ட செய்தியாளர்களை அசர வைத்துவிட்டார் கர்நாடக துணைமுதல்வர் கோவிந்த் கர்ஜோல். மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வரும் நோக்கிலும், போக்குவரத்து விதிமுறைகளை தடுக்கும் நோக்கிலும் குற்றங்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் பெரும் தொகையை அபராதமாக செலுத்தி வருகின்றனர். அபராத தொகையை குறைக்க
 

சாலைகள் நல்லா இருப்பதால்தான் விபத்துக்கள் நடப்பதாக கூறி, கேள்வி கேட்ட செய்தியாளர்களை அசர வைத்துவிட்டார் கர்நாடக துணைமுதல்வர் கோவிந்த் கர்ஜோல்.

மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வரும் நோக்கிலும், போக்குவரத்து விதிமுறைகளை தடுக்கும் நோக்கிலும் குற்றங்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் பெரும் தொகையை அபராதமாக செலுத்தி வருகின்றனர்.

அபராத தொகையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். ஆனால், உயிர்தான் முக்கியம் அதனால அபராத தொகையை குறைக்க முடியாது. வேண்டும் என்றால் மாநில அரசுகள் அபராத தொகையை குறைக்கலாம் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறிவிட்டார். இதற்கிடையே விபத்துக்களை ஏற்படுத்தும்  மோசமான சாலையை வைத்துக்கொண்டு அதிக அபராத தொகை போடுவது ஏன் என சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது விபத்துக்களை ஏற்படுத்தும் மோசமான சாலைகள் இருக்கும் போது அதிக அபராதம் போடுவது ஏன் செய்தியாளர்கள் துணை முதல்வரிடம் கேட்டனர். அதற்கு கோவிந்த் கர்ஜோல், நல்ல சாலைகளால்தான் விபத்து நடக்கிறது, தரமற்ற சாலைகளால் அல்ல.

நம்ம நெடுஞ்சாலைகளில் வாகனங்களை பாருங்க 100 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் செல்கின்றன. அதிக அபராதத்துக்கு நான் ஆதரவு அளிக்கமாட்டேன். கர்நாடக அமைச்சரவை அபராத தொகையை குறைப்பது தொடர்பாக முடிவு எடுக்கும் என கூறினார்.