×

ரூ.8,049 கோடி லாபம் பார்த்த டி.சி.எஸ்….. இருந்தாலும் போன வருஷத்தை காட்டிலும் கொஞ்சம் கம்மியாம்..

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.8,049 கோடி ஈட்டியுள்ளது. இருப்பினும் இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (2020 ஜனவரி- மார்ச்) நிகர லாபமாக ரூ.8,049 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2019
 

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.8,049 கோடி ஈட்டியுள்ளது. இருப்பினும் இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் குறைவாகும்.

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (2020 ஜனவரி- மார்ச்) நிகர லாபமாக ரூ.8,049 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் நிகர லாபமாக ரூ.8,126 கோடி ஈட்டியிருந்தது.

கடந்த மார்ச் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளபோதிலும் நிகர லாபம் குறைந்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 5 சதவீதம் அதிகரித்து ரூ.39,946 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.38,010 கோடியாக இருந்தது.

டி.சி.எஸ். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு சென்ற நிதியாண்டுக்கு இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.6 அறிவித்துள்ளது. நேற்று பங்கு வர்த்தகம் முடிவில் டி.சி.எஸ். பங்கு விலை 1.09 சதவீதம் குறைந்து ரூ.1,715.60ஆக இருந்தது.