×

ரூ.20 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 153 புள்ளிகள் குறைந்தது….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 153 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் குறைந்தது. தென்கொரியா மற்றும் ஜப்பானில் பொதுமக்களிடம் வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளதால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இது போன்ற காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில்,
 

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 153 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடந்த ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் குறைந்தது. தென்கொரியா மற்றும் ஜப்பானில் பொதுமக்களிடம் வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளதால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இது போன்ற காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, ஓ.என்.ஜி.சி., பவர்கிரிட் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஏசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், டி.சி.எஸ். மற்றும் டெக்மகிந்திரா உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,240 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,276 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.49 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர்.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152.88 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 41,170.12 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 45.05 புள்ளிகள் சரிந்து 12,080.85 புள்ளிகளில் முடிவுற்றது.