×

ரூ.1.76 லட்சம் கோடி போதாது இன்னும் ரூ.30 ஆயிரம் கோடி வேணும்! ரிசர்வ் வங்கியின் கஜானாவை காலி செய்யும் மத்திய அரசு

வருவாய் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக, ரிசர்வ் வங்கியிடம் ரூ.30 ஆயிரம் கோடி வரை இடைக்கால டிவிடெண்டாக தரும்படி மத்திய அரசு கேட்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019-20ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது இது சாத்தியமா என்றால் சந்தேகம்தான். ஏனென்றால் வருவாய் நிலவரம் மந்தமாகதான் உள்ளது. இதுதவிர சரிவு கண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை தடுத்து ஊக்குவிக்கும் வகையில்
 

வருவாய் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக, ரிசர்வ் வங்கியிடம் ரூ.30 ஆயிரம் கோடி வரை இடைக்கால டிவிடெண்டாக தரும்படி மத்திய அரசு கேட்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019-20ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது இது சாத்தியமா என்றால் சந்தேகம்தான். ஏனென்றால் வருவாய் நிலவரம் மந்தமாகதான் உள்ளது. இதுதவிர சரிவு கண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை தடுத்து ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. இது மத்திய அரசின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நிதிப்பற்றாக்குறைய நிர்ணயித்த இலக்குகள் வைக்கவும், வருவாய் பற்றாக்குறையை சரி செய்யவும் ரிசர்வ் வங்கியிடம் இந்த நிதியாண்டுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.30 ஆயிரம் கோடி வரை தரும்படி மத்திய அரசு கேட்கும். அனேகமாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ரிசர்வ் வங்கியிடம் இந்த தொகையை மத்திய அரசு கேட்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம்தான் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, உபரி நிதி மற்றும் டிவிடெண்டாக மொத்தம் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. தற்போது மேலும் ரூ.30 ஆயிரம் கோடி வரை இடைக்கால டிவிடெண்டாக ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு கேட்கும் என தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.