×

ரயில் பயணத்தின்போது பசியால் யாரும் இறக்கவில்லை… மத்திய அமைச்சர் உறுதி

லாக்டவுனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகம் இயக்கி வருகிறது. ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த 25ம் தேதி வரை மொததம் 3,274 ரயில்கள் மூலம் மொத்தம் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். மேலும், ரயில்களில் பயணித்த புலம்பெயர்ந்தவர்களுக்கு 74 லட்சம் உணவுகள் மற்றும் 1 கோடிக்கும் அதிகமான தண்ணீர் பாட்டில்களை ஐ.ஆர்.சி.டி.சி. வழங்கியுள்ளது. ஆனால் ரயில்
 

லாக்டவுனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகம் இயக்கி வருகிறது. ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த 25ம் தேதி வரை மொததம் 3,274 ரயில்கள் மூலம் மொத்தம் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

மேலும், ரயில்களில் பயணித்த புலம்பெயர்ந்தவர்களுக்கு 74 லட்சம் உணவுகள் மற்றும் 1 கோடிக்கும் அதிகமான தண்ணீர் பாட்டில்களை ஐ.ஆர்.சி.டி.சி. வழங்கியுள்ளது. ஆனால் ரயில் பயணித்தின்போது பசியால் 10 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இதனை மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷான் ரெட்டி கடுமையாக மறுத்துள்ளார்.

மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷான் ரெட்டி இது தொடர்பாக கூறுகையில், ரயில் பயணத்தின்போது யாரும் பசியால் இறக்கவில்லை. ரயில் பயணத்தின் போது 10 பேர் பசியால் இறந்ததாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும், கூடுதல் தகவல்களுக்கு பிரேத பரிசோதனைக்காக காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.