×

யாரென்று தெரியாமல் தடுத்து நிறுத்திய போலீஸ்… சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்ட அமைச்சர்!

பீகார் மாநிலம் சிவானில் புதிய மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே பங்கேற்றார். விழாவுக்கு அமைச்சர் வருகிறார் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் மங்கல் பாண்டே விழா நடைபெறும் இடத்துக்கு வந்துள்ளார். பீகாரில் யாரென்று தெரியாமல் அமைச்சரைத் தடுத்து நிறுத்திய காவலரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சிவானில் புதிய மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல்
 
பீகார் மாநிலம் சிவானில் புதிய மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே பங்கேற்றார். விழாவுக்கு அமைச்சர் வருகிறார் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் மங்கல் பாண்டே விழா நடைபெறும் இடத்துக்கு வந்துள்ளார்.

பீகாரில் யாரென்று தெரியாமல் அமைச்சரைத் தடுத்து நிறுத்திய காவலரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சிவானில் புதிய மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே பங்கேற்றார். விழாவுக்கு அமைச்சர் வருகிறார் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் மங்கல் பாண்டே விழா நடைபெறும் இடத்துக்கு வந்துள்ளார்.
அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர் மங்கல் பாண்டேவை நிற்கும்படி கையசைத்துள்ளார். உடன், அமைச்சருடன் வந்தவர்கள் அந்த காவலரை பிடித்து கையை மடக்கி அடிக்க ஆரம்பித்தனர். உடன் உயர் அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்தனர். காவலரை விடச் சொன்ன அமைச்சர், ஒரு அமைச்சரைக் கூட தெரியாமல் உள்ள இந்த காவலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிற்கச் சொன்னதற்காக அமைச்சர் ஒருவர் காவலரை சஸ்பெண்ட் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.