×

மோடியை திருடன் என கூறிய வழக்கு; உச்சநீதிமன்றத்துக்கு ராகுல் பதில்?!..

அமேதியில் பேசிய ராகுல், உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காவலாளியே திருடன் (Chowkidar chor hai) என மொத்த நாடும் சொல்லுகிறது என மோடியை குறிப்பிட்டார். புதுதில்லி: ரஃபேல் விவகாரத்தை திரித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய
 

அமேதியில் பேசிய ராகுல், உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காவலாளியே திருடன் (Chowkidar chor hai) என மொத்த நாடும் சொல்லுகிறது என மோடியை குறிப்பிட்டார்.

புதுதில்லி: ரஃபேல் விவகாரத்தை திரித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறது. ஆனால், பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரஃபேல் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்ததாக ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார், பாஜக தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாளிதழில் வெளியாகும் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அமேதியில் பேசிய ராகுல், உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காவலாளியே திருடன் (Chowkidar chor hai) என மொத்த நாடும் சொல்லுகிறது என மோடியை குறிப்பிட்டார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் பற்றி எந்த ஆதாரமுமின்றி, நீதிமன்றம் கூறாத ஒன்றை ராகுல் குறிப்பிட்டு பேசுகிறார் என பாஜக சார்பில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி தனக்கு மோடி மீதுள்ள வெறுப்பில் நீதிமன்றம் கூறாத ஒன்றை திரித்து கூறுகிறார். நீதிமன்ற உத்தரவில் பாதியை கூட அவர் படிக்கவில்லை. நீதிமன்றம் காவலாளியே திருடன் (Chowkidar chor hai) என கூறியதாக பேசி வருகிறார், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் 22-ஆம் தேதிக்குள் ராகுல் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு உச்சநீதிமன்றத்திடம் ராகுல் காந்தி தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க: பொன்பரப்பி பிரச்னை; திமுக பிரமுகர் உயிருக்கு ஆபத்து?!..