×

மைலேஜ் தொடர்பாக பொய்யான வாக்குறுதி…. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3.5 லட்சம் அபராதம் விதிப்பு…தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம்….

கார் விளம்பரத்தில் மைலேஜ் தொடர்பாக பொய்யான வாக்குறுதி அளித்தற்காக, பாதிக்கப்பட்ட வாடிக்யைாளர்க்கு இழப்பீடு மற்றும் தண்டனை சேதங்களுக்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் ரூ.3.5 லட்சம் செலுத்த தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் பிரதீப்தா குண்டு. இவர் டாடா இண்டிகோ கார் லிட்டருக்கு 25 கி்.மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து, 2011ல் டாடா இண்டிகோ காரை வாங்கினார். ஆனால் விளம்பரத்தில் உறுதி அளித்தப்படி அந்த கார் மைலேஜ் கொடுக்கவில்லை. இதனால்
 

கார் விளம்பரத்தில் மைலேஜ் தொடர்பாக பொய்யான வாக்குறுதி அளித்தற்காக, பாதிக்கப்பட்ட வாடிக்யைாளர்க்கு இழப்பீடு மற்றும் தண்டனை சேதங்களுக்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் ரூ.3.5 லட்சம் செலுத்த தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் பிரதீப்தா குண்டு. இவர் டாடா இண்டிகோ கார் லிட்டருக்கு 25 கி்.மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து, 2011ல் டாடா இண்டிகோ காரை வாங்கினார். ஆனால் விளம்பரத்தில் உறுதி அளித்தப்படி அந்த கார் மைலேஜ் கொடுக்கவில்லை. இதனால் பிரதீப்தா குண்டு ஏமாற்றம் அடைந்தார். இதனையடுத்து காரை மாற்றி தரும்படி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால் காரை மாற்றி தர நிறுவனம் மறுத்து விட்டது.

உடனே பிரதீப்தா குண்டு, மாவட்ட நுகர்வோர் பிரச்சினை தீர்வு ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த மாவட்ட ஆணையம், பிரதீப்தா குண்டுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் மற்றும் செலவு ரூ.10 ஆயிரத்துடன் வாகனத்தின் விலையான ரூ.4.8 லட்சத்தையும் வழங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில நுகர்வோர் பிரச்சினை தீர்வு ஆணையத்திடம் டாடா மோட்டார்ஸ் மேல்முறையீடு செய்தது. அங்கும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு சாதமாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தது.

டாடாவின் மேல்முறையீட்டை விசாரித்த தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மாவட்ட நுகர்வோர்  குறை தீர்வு ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்தது. பிரதீப்தா குண்டுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும், தண்டனையான சேதங்களுக்கு ரூ.1.5 லட்சத்தை மாநில நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் உத்தரவிட்டது.